நடிகர்கள் அரசியலுக்கு வராமலே நல்லது செய்யலாம் - சிவராஜ்குமார்
- படத்தின் ப்ரோமோஷனுக்காக சிவராஜ்குமார் சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
- மக்களுக்கு நல்லது செய்ய எதற்கு அரசியலுக்கு வரணும் என்று சிவராஜ்குமார் தெரிவித்தார்
சிவராஜ்குமார், உபேந்திரா நடித்துள்ள 45 திரைப்படம் வரும் 25ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக சிவராஜ்குமார் சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, "தமிழ்நாட்டில் சினிமா பிரபலங்களான MGR முதல் விஜய் வரை பலரும் அரசியலுக்கு வந்துள்ளனர். ஆனால் கர்நாடகாவில் ஏன் அப்படி இல்லை" என்று சிவராஜ்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த சிவராஜ்குமார், "மக்களுக்கு நல்லது செய்ய எதற்கு அரசியலுக்கு வரணும்... நடிகராக இருந்துகொண்டே உதவி பண்ணலாம். காரணம் இது என்னுடைய பணம்... யாரிடமும் பாரபட்சம் பார்க்காமல் உதவி செய்வேன்" என்று தெரிவித்தார்.
சில மாதங்களுக்கு முன்பு திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிவராஜ்குமார், "விஜய் அரசியலுக்கு வரும்போதே அவர் பேசியது எனக்கு பிடித்தது. விஜய் அரசியலுக்கு வந்ததை வரவேற்கிறேன். ஆனால் கரூர் கூட்டநெரிசலில் 41 உயிர் போனது கஷ்டமாக இருந்தது. விஜய் அரசியலில் நிதானமாக முடிவெடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.