செய்திகள்

வாஜ்பாய் இறுதி ஊர்வலத்தில் 4 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்ற பிரதமர் மோடி, அமித்ஷா

Published On 2018-08-17 10:03 GMT   |   Update On 2018-08-17 10:31 GMT
பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித்ஷா உள்பட ஆயிரக்கணக்கான பாஜகவினர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இறுதி ஊர்வலத்தில் நான்கு கிலோமீட்டர் தொலைவு நடந்தே சென்றனர். #AtalBihariVajpayee #AIIMS #RIPVajpayee
புதுடெல்லி:

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (93) உடல்நலக் குறைவால் கடந்த ஜூன் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமடைந்தததால் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 5.05 மணிக்கு அவர் மரணமடைந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்தது.

டெல்லியில் மரணமடைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு ஜனாதிபதி, பிரதமர், துணை ஜனாதிபதி, உள்துறை மந்திரி, பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்பட பலர் இரங்கல் தெரிவித்தனர். அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

டெல்லி பாஜக அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக இன்று வாஜ்பாய் உடல் வைக்கப்பட்டது. அங்கும் வெளிநாட்டு தலைவர்கள் உள்பட பலர் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.



இந்நிலையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் கட்சி அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி முடிந்ததும், அங்கிருந்து பிற்பகல் 2 மணிக்கு வாஜ்பாயின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் வாஜ்பாயின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

வாஜ்பாய் இறுதி ஊர்வலத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித்ஷா மற்றும் ஆயிரக்கணக்கான பாஜகவினர் சுமார் நான்கு கிலோ மீட்டர் தொலைவு நடந்தே சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. #AtalBihariVajpayee #AIIMS #RIPVajpayee
Tags:    

Similar News