செய்திகள்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு - துணை ஜனாதிபதி, உள்துறை மந்திரி, அத்வானி இரங்கல்

Published On 2018-08-16 13:21 GMT   |   Update On 2018-08-16 13:21 GMT
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மரணமடைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு துணை ஜனாதிபதி, உள்துறை மந்திரி, அத்வானி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். #AtalBihariVajpayee #AIIMS #RIPVajpayee #VenkaiahNaidu #LKAdvani #RajnathSingh
புதுடெல்லி:

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (93) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையை அவ்வப்போது, பிரதமர் மோடி, மூத்த மந்திரிகள் நேரில் சென்று விசாரித்து வந்தனர்.

இதற்கிடையே, இன்று காலை முதல் வாஜ்பாய் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று மாலை 5.05 மணிக்கு அவர் மரணமடைந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்தது.

இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மரணமடைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு துணை ஜனாதிபதி, உள்துறை மந்திரி, அத்வானி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.



இதுதொடர்பாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறுகையில், வாஜ்பாயின் ஆளுமை, கடமையின் மீதான பக்தி, தலைமைப் பண்பு நீண்ட காலத்துக்கு நினைவு கூரப்படும். பன்முகத்தன்மை கொண்ட ஒரு ரத்தினத்தை நாடு இழந்துவிட்டது என இரங்கல் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவால் தாங்க முடியாத துயரத்தில் உள்ளேன் என பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி இரங்கல் தெரிவித்துள்ளார்.

வாஜ்பாய் மறைவு செய்தி மிகுந்த வலியை ஏற்படுத்தியது, மிகச்சிறந்த தலைவரை தேசம் இழந்துள்ளது என உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பதிவிட்டுள்ளார். #AtalBihariVajpayee #AIIMS #RIPVajpayee #VenkaiahNaidu #LKAdvani #RajnathSingh
Tags:    

Similar News