செய்திகள்

ஜனாதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த கோவில் பூசாரி கைது

Published On 2018-08-06 06:00 GMT   |   Update On 2018-08-06 06:00 GMT
கேரளா வந்துள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை கொல்ல போவதாக மிரட்டல் விடுத்த கோவில் பூசாரி கைது செய்யப்பட்டார்.
கொழிஞ்சாம்பாறை:

கேரளாவுக்கு 3 நாள் பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று சென்றார். அவரை கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வரவேற்றார். கேரளாவில் பல்வேறு அரசு விழாவில் ஜனாதிபதி பேசி வருகிறார்.

நாளை திருச்சூரில் நடக்கும் விழாவில் உரையாற்ற உள்ளார். இந்நிலையில் நேற்று இரவு திருச்சூர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு மர்ம போன் வந்தது. அதில் பேசிய நபர் திருச்சூர் வரும் ஜனாதிபதி கொலை செய்யப்படுவார் என்று கூறி இணைப்பை துண்டித்து விட்டார். உஷாரான உயர் அதிகாரிகள் கொலை மிரட்டல் விடுத்த நபரை தேடினர். குன்னங்குளம் உதவி கமி‌ஷனர் சைபர் செல் போலீசார் உதவியுடன் செல்போன் எண்ணை வைத்து தேடினர்.

தீவிர தேடுதல் வேட்டையில் மிரட்டல் விடுத்தது திருச்சூர் விரைக்கல்லில் உள்ள பகவதியம்மன் கோவில் பூசாரி ஜெயராமன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News