செய்திகள்

அன்புக்காக ஏங்கும் 1,991 அனாதை குழந்தைகள் - தத்தெடுக்க துடிக்கும் 20 ஆயிரம் பெற்றோர்கள்

Published On 2018-08-05 18:05 IST   |   Update On 2018-08-05 18:05:00 IST
இந்தியாவில் ஆயிரத்து 991 அனாதை குழந்தைகள் இருப்பதாகவும், அவர்களை தத்தெடுக்க சுமார் 20 ஆயிரம் பெற்றோர் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. #AdoptionKids #Parents #CentralAdoptionResourceAuthority
புதுடெல்லி:

பல்வேறு காரணங்களினால் பெற்றோரை இழந்த குழந்தைகள் அனாதைகளாக காப்பகங்களிலும், கருணை இல்லங்களிலும் வளர்ந்து வருகிறார்கள். அவர்களை தங்களது சொந்த பிள்ளைகளாக வளர்க்க குழந்தை பெற இயலா பெற்றோர்கள் பலர் தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்தியாவில் அனாதை குழந்தைகளின் எண்ணிக்கை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில் இந்தியா முழுவதும் பதிவு செய்யப்பட்ட காப்பகங்களில் மட்டும் ஆயிரத்து 991 குழந்தைகள் பராமரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் பெண் குழந்தைகள் மட்டும் ஆயிரத்து 322 பேர் உள்ளனர்.



அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 376 குழந்தைகளும், ஒடிசாவில் 299 குழந்தைகளும் வளர்க்கப்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இவர்களை தத்தெடுக்க 20 ஆயிரம் பெற்றோர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதுகுறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் ராகேஷ் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ள ஆயிரத்து 991 குழந்தைகளின் எண்ணிக்கை என்பது மத்திய தத்தெடுப்பு வள ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட காப்பகங்களில் இருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை மட்டுமே என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குழந்தைகளை தத்தெடுக்க 20 ஆயிரம் பெற்றோர்கள் காத்திருப்பதாகவும், அதன்படி, 1 குழந்தைக்காக சுமார் 10 பெற்றோர்கள் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். #AdoptionKids #Parents #CentralAdoptionResourceAuthority 
Tags:    

Similar News