செய்திகள்

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கம் லஷ்கர்-இ-தொய்பாவில் எம்.பி.ஏ. மாணவர்

Published On 2018-07-30 12:54 IST   |   Update On 2018-07-30 12:54:00 IST
காஷ்மீரில் எம்.பி.ஏ. பட்டம் படிக்கும் மாணவர் ஒருவர் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவில் இணைந்துள்ளார். #LashkareTaiba

ஸ்ரீநகர்:

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கத்தினர் இந்தியாவில் நாசவேலையில் ஈடுபடுகிறார்கள். இந்த அமைப்புகள் காஷ்மீரில் அப்பாவி இளைஞர்களையும், படித்த வாலிபர்களையும் அந்த அமைப்பில் சேர்த்து வருகிறது.

இந்த நிலையில் காஷ்மீரில் எம்.பி.ஏ. பட்டம் படிக்கும் மாணவர் ஒருவர் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவில் இணைந்துள்ளார்.

அந்த வாலிபரின் பெயர் இஷ்பக் வாணி. 26 வயதான அவர் தெற்கு காஷ்மீர் பகுதி புல்வாமா மாவட்டத்தை சேர்ந்தவர். அந்த வாலிபருக்கு லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் ‘அபுதுராப்’ என்ற குறியீடு பெயர் வழங்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த இஷ்பக் வாணி ஏ.கே. 47 ரக துப்பாக்கியுடன் இருக்கும் படம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

இஷ்பக் மாயமானதாக அவரது குடும்பத்தினர் கடந்த 22-ந்தேதி போலீசில் புகார் கொடுத்து இருந்தனர். அவர் பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்த தகவல் தற்போது தெரியவந்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் காஷ்மீரில் பி.எச்.டி. மாணவர் பஷீர்வாணி பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்து இருந்தார். கடந்த 6 மாதத்தில் மட்டும் 100 இளைஞர்கள் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #LashkareTaiba

Tags:    

Similar News