செய்திகள்

ஜார்கண்டில் இடி மின்னல் தாக்கியதில் 4 பேர் பலி

Published On 2018-07-21 02:22 IST   |   Update On 2018-07-21 02:22:00 IST
ஜார்கண்ட் மாநிலத்தில் இடி மின்னல் தாக்கியதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஞ்சி :

வட மாநிலங்களில் கடந்த சில தினங்களாகவே பரவலாக மழை பொழிந்து வருகிறது. இதனால், அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலம், சிங்பும் மாவட்டதில் இடி மின்னல் தாக்கியதில் இரண்டு பெண்கள் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கண்டசோல் மற்றும் கர்மதா எனும் கிராமங்களில் மழை பொழிந்துகொண்டிருந்த போது வயல்களில் வேலை பார்த்துகொண்டிருந்த ஒரு பெண் உள்பட இருவர் மின்னல் தாக்கி பலியாகியதாகவும், கட்சிலா எனும் பகுதியில் ஒரு பெண் உள்பட இருவர் இடி தாக்கி பலியாகினதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 
Tags:    

Similar News