செய்திகள்

ஹெலிகாப்டர் தரையிறங்க முடியாததால் வெள்ள பாதிப்பு பகுதிகளுக்கு காரில் சென்ற முதல்வர்

Published On 2018-07-18 06:10 GMT   |   Update On 2018-07-18 06:10 GMT
குஜராத்தில் மோசமான வானிலையால் ஹெலிகாப்டர் தரையிறங்க முடியாததால் வெள்ளம் பாதித்த பகுதிகளை காரில் சென்று பார்வையிட்டார் முதல் மந்திரி விஜய் ரூபானி. #VijayRupani
அகமதாபாத்:

குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு சென்று பார்வையிட முதல் மந்திரி விஜய் ரூபானி நேற்று ஹெலிகாப்டரில் சென்றார்.  

சோம்நாத் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட சென்றபோது அங்கு தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் அவர் சென்ற ஹெலிகாப்டரை தரையிறக்குவதில் சிரமம் ஏற்பட்டது.

இதையடுத்து, ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள ஜெட்பூர் என்ற பகுதியில் ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது. அதன்பின்னர் அங்கிருந்து வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட காரில் சென்றார். அவருடன் அரசு அதிகாரிகளும் உடன் சென்றனர்.
#VijayRupani
Tags:    

Similar News