செய்திகள்

ஆந்திராவில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: 2 பேர் பரிதாப பலி

Published On 2018-07-15 05:41 IST   |   Update On 2018-07-15 05:41:00 IST
ஆந்திராவில் பயணிகள் படகு கோதாவரி ஆற்றில் கவிழ்ந்து விழுந்த விபத்தில் 2 பேர் பலியாகினர். மேலும், மாயமான 6 பேரை தேடி வருகின்றனர். #AndhraPradesh #EastGodavri
ஐதராபாத்:

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பசுவுல்லங்கா என்னும் இடத்தில் இருந்து சலாதிவரி பாலெம் என்னும் இடம் நோக்கி பயணிகள் ஒரு படகு நேற்று மாலை கவுதமி ஆற்றில் சென்று கொண்டிருந்தது. இவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள் ஆவர்.

இதற்கிடையே நீர்ச்சுழலில் சிக்கிய அந்த படகு ஆற்றின் மீது கட்டப்பட்டு வரும் பாலத்தின் தூண் ஒன்றின் மீது பயங்கரமாக மோதி கவிழ்ந்தது.

இதில் படகில் இருந்த 30 பேரும் ஆற்றுக்குள் விழுந்து தத்தளித்தனர். இதையடுத்து விசாகப்பட்டினம் மற்றும் ராஜமகேந்திரவரம் நகரங்களில் இருந்து தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்களுடன் உள்ளூர் போலீசாரும் இணைந்து 25 பயணிகளை பத்திரமாக மீட்டனர்.

இந்த விபத்தில் 2 பேர் பலியாகினர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன. மேலும், மாயமான 6 பேரை தொடர்ந்து தேடி வருகின்றனர். அவர்களின் கதி என்ன என்பது உடனடியாக தெரியவரவில்லை. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நீடித்து வருவதாக மாநில முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.  #AndhraPradesh #EastGodavri
Tags:    

Similar News