செய்திகள்

பண மதிப்பிழப்பு நடவடிக்கை போல் ராமர் கோவில் கட்ட ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை - உத்தவ் கேள்வி

Published On 2018-07-14 20:01 GMT   |   Update On 2018-07-14 20:01 GMT
ஒரே நாளில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை செயல்படுத்தியது போல், ராமர் கோவில் கட்டுவதற்கு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என பாஜகவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார். #BJP #UddavThackery
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தின் புனேவில் சிவசேனா கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சி தலைவர் உத்தவ தாக்கரே கலந்து கொண்டார்.

அதன்பின்னர், உத்தவ் தாக்கரே செய்தியாளர்களிடம் கூறுகையில், ராமர் கோவில் கட்டுதல், பொது சிவில் சட்டம், ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370-ஐ நீக்குவது ஆகியவை பற்றி அவர்கள் (பாஜக) தேர்தலுக்கு முன்பாக பேசுகின்றனர். ஆனால், எந்த தேர்தல் (2019 அல்லது 2050) என்பது பற்றி தெளிவாக குறிப்பிடவில்லை. 

உங்களால் ஒரே நாளில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை செயல்படுத்த முடிந்தது. அதுபோல், ராமர் கோவில் கட்டுவதற்கான நடவடிக்கையை நீங்கள் ஏன் எடுக்கவில்லை. ஏனெனில் நீங்கள் தான் பெரும்பான்மை பலத்துடன் உள்ளீர்கள்.

மகாராஷ்டிராவில் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட விவசாய கடன்கள் தள்ளுபடியின் ப்லன்களை அவர்களை சென்று சேரவில்லை. வளர்ச்சிதான் எங்கள் கொள்கை என்று முழங்கிய பாஜக, தற்போது ராமர் கோவில் விவகாரத்தை எடுத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். 
Tags:    

Similar News