செய்திகள்

ஆதார் திட்டத்தை அமல்படுத்துவதில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாநிலங்களுக்கு விருதுகள் அறிவிப்பு

Published On 2018-07-11 13:36 GMT   |   Update On 2018-07-11 13:36 GMT
ஆதார் திட்டத்தை மிக விரைவாக அமல்படுத்துவதில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாநிலங்களுக்கு ஆதார் நிறுவனம் இன்று சிறப்பு விருதுகளை அறிவித்துள்ளது.
புதுடெல்லி:

உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை நாடான இந்தியாவில், நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் தனித்தனி அடையாள எண் வழங்குவதன் மூலம் நாடுதழுவிய குடிமக்கள் தரவுத்தளத்தை உருவாக்கும் நோக்கில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது ஆதார் அட்டை திட்டம். அதனடிப்படையில், இந்தியாவில் உள்ள 120 கோடி மக்களுக்கு 12 இலக்க எண் பொறித்த ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மக்களிடம் விரைவாக ஆதார் அட்டை திட்டத்தை கொண்டு சேர்த்த மாநிலங்களுக்கு ஆதார் நிறுவனம் சிறப்பு விருதுகளை அறிவித்துள்ளது.

ஆதார் அட்டை திட்டத்தில், மக்களின் பத்து கைவிரல் ரேகைகள், பெயர், முகவரி, குடும்ப உறுப்பினர் உள்ளிட்ட தகவல்களை மிக விரைவாக  பதிவு செய்ததற்காக பஞ்சாப், பீகார் மற்றும் தெலுங்கானா போன்ற மாநிலங்களும், ஆதார் அட்டைகளை மிக விரைவாக தபால் மூலம் மக்களிடம் கொண்டு சேர்த்ததற்காக மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் பஞ்சாப் போன்ற மாநிலங்களும்  சிறப்பு விருதுகளை பெறவுள்ளது.
Tags:    

Similar News