செய்திகள்

டெல்லி கவர்னரை கெஜ்ரிவால் நாளை மதியம் சந்திக்கிறார்

Published On 2018-07-05 17:18 GMT   |   Update On 2018-07-05 17:18 GMT
டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கவர்னர் அனில் பைஜாலை நாளை மதியம் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #AnilBaijal #ArvindKejriwal
புதுடெல்லி:

டெல்லியில் துணை நிலை கவர்னருக்கு சுதந்திரமாக முடிவு எடுக்கும் அதிகாரம் இல்லை. மந்திரி சபையின் அறிவுரையின் பேரில்தான் அவர் செயல்பட முடியும் என்று சுப்ரீம்  கோர்ட் சமீபத்தில் அதிரடியாக தீர்ப்பளித்தது.

நிலம், சட்டம்–ஒழுங்கு உள்ளிட்ட 3 துறைகள் தவிர மற்ற அனைத்தின் மீதும் சட்டம் இயற்றி ஆட்சி செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கே இருப்பதாக தெரிவித்தது. ஆனால் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் டெல்லியில் மோதல்களை முடிவுக்கு கொண்டுவர முடியவில்லை.

இதற்கிடையே, புதுடெல்லியில் ஆட்சி சுமுகமாக நடைபெற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்துவது தொடர்பாக துணை நிலை ஆளுநர் அனில் பைஜாலை சந்தித்துப் பேச முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேரம் கோரி கடிதம் எழுதியுள்ளார்.  

இந்நிலையில், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கவர்னர் அனில் பைஜாலை நாளை மதியம் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக, டெல்லி கவர்னர் அனில் பைஜாலை நாளை மதியம் 3 மணிக்கு முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா ஆகியோர் சந்தித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #AnilBaijal #ArvindKejriwal
Tags:    

Similar News