செய்திகள்

சீனாவுடன் போட்டி திட்டம் - கர்நாடகா தொழில் வளர்ச்சிக்கு முதல்மந்திரி புதிய அறிவிப்பு

Published On 2018-07-05 11:09 GMT   |   Update On 2018-07-06 02:48 GMT
கர்நாடக மாநிலத்தின் தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், 'சீனாவுடன் போட்டியிடுவோம்' என்ற புதிய திட்டத்தை அம்மாநில முதல்மந்திரி குமாரசாமி அறிவித்துள்ளார். #KarnatakaCM #CompetewithChina
பெங்களூரு:

கர்நாடக சட்டசபையில் பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல்மந்திரி குமாரசாமி, தொழில்துறை வளர்ச்சிக்கான திட்டங்களை பட்டியலிட்டார்.

அப்போது, 'சீனாவுடன் போட்டியிடுவோம்' என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்வதாகவும், இந்த புதிய திட்டத்தின் மூலம் கர்நாடகாவில் வருவாய் இல்லாமல் மூடும் தருவாயில் இருக்கும் சிறு நிறுவனங்கள் தங்கள் தொழிலை வளர்க்க உதவும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சீன தயாரிப்புகளுடன் போட்டியிடுவதற்காக, அதேபோன்ற தயாரிப்புகளை கிராமப்புறங்களில் தயாரிக்க  உள்ளதாகவும், அதனை தாலுகா ரீதியாக  சேகரித்து வணிக வளாகங்கள் மூலம் விற்பனை செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பல்வேறு மாவட்டங்களிலும் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் எனவும் முதல்மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார். #KarnatakaCM #CompetewithChina
Tags:    

Similar News