செய்திகள்

பஞ்சாப்பில் ரூ. 74 கோடி ஹெராயின் பறிமுதல் - முன்னாள் ராணுவ வீரர் உட்பட 4 பேர் கைது

Published On 2018-07-03 19:34 IST   |   Update On 2018-07-03 19:34:00 IST
பஞ்சாப் மாநிலத்தில் ஹெராயின் கடத்திய முன்னாள் ராணுவ வீரர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து சுமார் 74 கோடி ரூபாய் அளவிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. #Heroinceased
காந்திநகர்:

பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் வழியாக இந்தியாவுக்கு ஹெராயின் போன்ற போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலை அடுத்து காவல்துறையினர் அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது சுமார் 14.8 கிலோ அளவிலான ஹெராயினை கடத்திய முன்னாள் ராணுவ வீரர் உட்பட 4 பேர் போலீசார் வசம் சிக்கினர். இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், எல்லை பாதுகாப்பில் ஈடுபடும் வீரர் ஒருவர் தங்களுக்கு உதவி வருவதாக வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடத்தல்காரர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட  ஹெராயினின் மதிப்பு சுமார் 74 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற போதைப்பொருட்கள் கடத்தல்களில் ஈடுபடுபவர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. #Heroinceased
Tags:    

Similar News