செய்திகள்

கற்பழிப்பு வழக்கில் ஆயுள் தண்டனையை எதிர்த்து ஐகோர்ட்டில் ஆசாராம் பாபு வழக்கு

Published On 2018-07-03 09:37 GMT   |   Update On 2018-07-03 09:37 GMT
கற்பழிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனைக்கு எதிராக ராஜஸ்தான் ஐகோர்ட்டில் ஆன்மிகவாதி ஆசாராம் பாபு முறையீட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். #Asaramchallengesconviction #Asarambapu
ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் உள்ள ஆசிரமத்தில் 16 வயது சிறுமியை கற்பழித்ததாக தொடரப்பட்ட வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதித்து ஜோத்பூர் நீதிமன்றம் கடந்த 25-4-2018 அன்று தீர்ப்பளித்தது.

இச்சம்பவத்தில் அவருக்கு உடந்தையாக இருந்த சரத் மற்றும் சில்பி ஆகியோருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தற்போது ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆசாராம் பாபு ஜோத்பூர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் நேற்று முறையீட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலம், ஷாஜஹான்பூர் பகுதியை சேர்ந்த அந்த சிறுமி, மத்தியப்பிரதேசம் மாநிலம், சின்ட்வாரா பகுதியில் உள்ள ஆசாராம் பாபுவின் ஆசிரமத்தில் தங்கி படித்து வந்தார்.

அங்கிருந்து ஜோத்பூரில் உள்ள தனது ஆசிரமத்துக்கு வரவழைத்த  ஆசாராம் பாபு, கடந்த 15-8-2013 அன்று நள்ளிரவில் சிறுமியை கற்பழித்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது நினைவிருக்கலாம். #Asaramchallengesconviction #Asarambapu
Tags:    

Similar News