செய்திகள்

பாராளுமன்றத்தில் ஒரு நாளைக்கு 5 கேள்விகள் மட்டுமே கேட்க அனுமதி: சபாநாயகர் புதிய உத்தரவு

Published On 2018-07-01 16:28 GMT   |   Update On 2018-07-01 16:28 GMT
பாராளுமன்றத்தில் ஒரு நாளைக்கு 5 கேள்விகள் மட்டுமே கேட்க அனுமதி அளிக்கப்படும் என சபாநாயகர் சுமித்ரா மகாஜன் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். #SumitraMahajan #parliament
புதுடெல்லி:

பாராளுமன்ற மக்களவையில் இதுவரை ஒரு நாளைக்கு 10 கேள்விகள் வரை கேட்க எம்.பி.க்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில்  ஒரு நாளைக்கு 5 கேள்விகள் மட்டுமே கேட்க அனுமதி அளிக்கப்படும் என மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் புதிய உத்தரவை பிறப்பித்து உள்ளார்.

மக்களவை பொதுச் செயலாளர் சினேகலதா ஸ்ரீவத்சவா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மக்களவையில் இதற்கு முன்பு எம்.பி.க்கள் நாள் ஒன்றுக்கு 10 கேள்விகள் வரை கேட்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் அதிக கேள்விகள் குவிவதுடன், ஒரு சில எம்.பி.க்கள் கேள்வி கேட்க வாய்ப்பு கிடைப்பதில்லை. 

எனவே தற்போது 5 கேள்விகள் மட்டுமே கேட்க அனுமதி அளிக்கப்படுகிறது. அதற்கு மேல் கேட்கும் எம்.பி.க்களின் கேள்விகள் பரிசீலிக்கப்பட்டு அடுத்த நாள் அவை சபையில் இடம்பெறும். இந்த உத்தரவு, வரும் மக்களவை கூட்டத்தொடரில் இருந்து அமலுக்கு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. #SumitraMahajan #parliament
Tags:    

Similar News