செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஆடுகள் ஏற்றுமதியை நிறுத்தியது மகாராஷ்டிரா அரசு

Published On 2018-07-01 16:36 IST   |   Update On 2018-07-01 16:36:00 IST
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜெயின் சமூகத்தினரின் எதிர்ப்பால் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஆடுகள் ஏற்றுமதி செய்வதை அம்மாநில அரசு நிறுத்தி வைத்துள்ளது. #SheepExport #Maharashtra
மும்பை:

விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், ஆடுகள் மற்றும் செம்மறி ஆடுகளை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஏற்றுமதி செய்ய மகாராஷ்டிர அரசு முடிவு செய்தது. அதன்படி முதற்கட்டமாக இரண்டாயிரம் ஆடுகளை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு நேற்று மதியம் ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த ஜெயின் சமூகத்தினர், ஆர்.எஸ்.எஸ் அமைப்பிடம் ஆதரவு கோரி ஆர்.எஸ்.எஸ் தலைமையகம் நோக்கி மிகப்பெரிய பேரணியை நடத்தினர். இதனால், ஆடுகள் ஏற்றுமதி திட்டத்தை அம்மாநில அரசு ஒத்திவைத்துள்ளது. போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, ஏற்றுமதி குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய திகம்பர் ஜெயின் மகாசபா சமிதியின் தலைவர், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க இதைவிட சிறந்த வழிகள் பல இருப்பதாகவும், ஆடுகளை ஏற்றுமதி செய்வதற்கு நாங்கள் முழுமையாக எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். #SheepExport #Maharashtra
Tags:    

Similar News