செய்திகள்

பெண்களுக்கு ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது நாட்டிற்கே அவமானம் - ராகுல்

Published On 2018-06-26 16:14 IST   |   Update On 2018-06-26 16:14:00 IST
பெண்களுக்கு மிகவும் ஆபத்து நிறைந்த நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளது நாட்டிற்கே அவமானம் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். #DangerousCountry #MeToo #RahulGandhi
புதுடெல்லி :

உலக அளவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில், பாலியல் ரீதியாக பெண்களுக்கு ஆபத்தான நாடுகள் குறித்து 550 பேரை உள்ளடக்கிய உலகளாவிய வல்லுநர்கள் குழு கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது.

இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இதில் உலகிலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடாக இந்தியா பட்டியலிடப்பட்டுள்ளது.  பெண்களுக்கு மிகவும் ஆபத்தான முதல் 10 நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான் இரண்டாம் இடத்தில் உள்ளது. சிரியாவும் அமெரிக்காவும் மூன்றாமிடத்தில் உள்ளன. சோமாலியா, சவுதி அரேபியா அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.  

இந்நிலையில், இந்த கருத்துகணிப்பு முடிவு  நாட்டிற்கே அவமானம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது :-

‘‘பிரதமர் மோடி தோட்டத்தை சுற்றி வந்து யோகாசனம் செய்யும் வேளையில், பாலியல் ரீதியாக பெண்களுக்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் ஆப்கானிஸ்தான் சிரியா நாடுகளை முந்தி இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. இது நாட்டிற்கே மிகப்பெரிய அவமானம் ” .

இவ்வாறு அவர் விமர்சித்துள்ளார்.

ஏழு வருடங்களுக்கு முன்னதாக பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இந்தியா நான்காம் இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.  #DangerousCountry #MeToo #RahulGandhi
Tags:    

Similar News