செய்திகள்

வாஜ்பாய் உடல் நிலை குறித்து விசாரிக்க எய்ம்ஸ் மருத்துவமனை சென்றார் பிரதமர் மோடி

Published On 2018-06-24 21:24 GMT   |   Update On 2018-06-24 21:24 GMT
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் நலம் குறித்து அறிவதற்காக பிரதமர் மோடி நேற்று இரவு மீண்டும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்றார். #AIIMS #AtalBihariVajpayee #PMModi
புதுடெல்லி:

1998 முதல் 2004-ம் ஆண்டு வரை நாட்டின் பிரதமராக பதவி வகித்த வாஜ்பாய் (93), முதுமை காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். உடல்நிலை ஒத்துழைக்காததால் பொது வெளியில் எந்த நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கவில்லை. 

அவருக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டபோதுகூட அவர் நேரில் வந்து விருதினை பெற முடியவில்லை. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வாஜ்பாயின் வீட்டுக்குச் சென்று விருதை வழங்கினார்.

இதற்கிடையே, வாஜ்பாயின் உடல்நிலை சமீபத்தில் மோசமடைந்தது. இதனால் அவரை உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு டாக்டர் ரன்தீப் குலேரியா தலைமையிலான மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். எய்ம்சில் சிகிச்சை பெற்று வரும அவரை பிரதமர் மோடி உள்பட முக்கிய தலைவர்கள் நேரில் சென்று உடல்நிலை குறித்து விசாரித்தனர்.



இந்நிலையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் நலம் குறித்து அறிவதற்காக பிரதமர் மோடி நேற்று இரவு மீண்டும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்றார்.

இதுதொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறுகையில், பிரதமர் மோடி நேற்று இரவு 9 மணிக்கு மீண்டும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்தார். சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை வாஜ்பாய் உறவினர்களை சந்தித்து பேசினார். அப்போது வாஜ்பாய் உடல் நிலை முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார் என தெரிவித்துள்ளனர். #AIIMS #AtalBihariVajpayee #PMModi
Tags:    

Similar News