செய்திகள்

ராணுவ ஆஸ்பத்திரியில் காஷ்மீர் கவர்னரின் ஆலோசகர் விஜயகுமார் - சிகிச்சை பெறுபவர்களுக்கு ஆறுதல்

Published On 2018-06-23 11:13 GMT   |   Update On 2018-06-23 11:13 GMT
காஷ்மீர் கவர்னரின் ஆலோசகர் விஜயகுமார் இன்று ஸ்ரீநகரில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெறுபவர்களுக்கு ஆறுதல் கூறினார். #AdvisortoKashmirGovernor #KashmirGovernorAdvisorVijayKumar #SrinagarArmyHospital
ஜம்மு:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கவர்னரின் ஆட்சி அமல்படுத்தப்பட்ட பின்னர் தமிழ்நாட்டை சேர்ந்த ஓய்வுபெற்ற ஐ,ஏ.எஸ். அதிகாரியான விஜயகுமார் கவர்னரின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இந்த பொறுப்பை ஏற்றுகொண்ட அவர் இன்று ஸ்ரீநகர் பதாமி பாக் பகுதியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு சென்றார்.

அங்கு காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் ராணுவ வீரர்களை சந்தித்து ஆறுதல் கூறியதுடன் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். #AdvisortoKashmirGovernor #KashmirGovernorAdvisorVijayKumar #SrinagarArmyHospital
Tags:    

Similar News