செய்திகள்
மாம்பழம் பறித்ததால் சுட்டுக் கொல்லப்பட்ட சிறுவன்
பீகார் மாநிலம் ககாரியா நகரில் மாம்பழம் பறித்துக்கொண்டிருந்த சிறுவன் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாட்னா:
பீகார் மாநிலம் ககாரியா நகரில் அமைந்துள்ள மாந்தோப்பில் நேற்று அப்பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் தோப்பின் உரிமையாளருக்கு தெரியாமல் மாம்பழம் பறித்துக் கொண்டிருந்துள்ளான். அப்போது, மர்மநபர் ஒருவர் அவனை துப்பாக்கியால் சுட்டதில் தலையில் குண்டு பட்டு சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
தகவல் அறிந்த காவல்துறையினர் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மாம்பழம் பறித்த சிறுவன் துப்பாக்கியால் தலையில் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.