செய்திகள்

ஒடிசாவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.45 லட்சம் கொள்ளை

Published On 2018-06-19 09:19 GMT   |   Update On 2018-06-19 09:19 GMT
ஒடிசா மாநிலம் ரூர்கேலா பகுதியில் அமைந்துள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் துப்பாக்கிகளுடன் வந்த கொள்ளையர்கள் 45 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். #bankrobbery #odisha
புவனேஸ்வர்:

ஒடிசா மாநிலத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது ரூர்கேலா நகரம். இந்த நகரத்தின் பஜார் பகுதியில் பிரபல இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை அமைந்துள்ளது. இன்று காலை 3 இரு சக்கர வாகனங்களில் வந்த 7 கொள்ளையர்கள் துப்பாக்கியுடன் வங்கிக்குள் நுழைந்து வங்கி அதிகாரிகள் மற்றும் வாடிக்கையாளர்களை துப்பாக்கி முனையில் மிரட்டியுள்ளனர்.

இதையடுத்து வங்கி ஊழியர்களை தாக்கி அவர்களிடம் இருந்து வங்கியின் கஜானா சாவியை பறித்துக்கொண்ட கொள்ளையர்கள், 45 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். மேலும், வங்கியில் உள்ள 
சி.சி.டி.வி காட்சிகள் பதிவாகும் ஹார்ட் டிஸ்குகளையும் கைப்பற்றி பின் தப்பிசென்றுள்ளனர்.



இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், இதுதொடர்பாக சம்பவம் தொடர்பான விசாரணையில் கொள்ளையர்கள் இந்தி மொழியில் பேசிக்கொண்டதாக சம்பவ இடத்தில் இருந்த வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து,  அண்டை மாநிலங்களை சேர்ந்த கொள்ளை கும்பலாக இருக்கலாம் என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பட்டப்பகலில் நகரத்தின் முக்கிய பகுதியில் உள்ள வங்கியில் நடைபெற்ற இந்த துணீகர கொள்ளை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #bankrobbery #odisha
Tags:    

Similar News