செய்திகள்

புழுதிப் புயலால் இன்றும் ஓடுபாதை தெரியவில்லை- சண்டிகரில் 26 விமானங்கள் ரத்து

Published On 2018-06-15 17:26 IST   |   Update On 2018-06-15 17:26:00 IST
சண்டிகரில் புழுதிப்புயல் காரணமாக விமான நிலைய ஓடுபாதை சரியாக தெரியாத நிலையில், இன்று 26 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. #DustStorm #ChandigarhAirport #FlightsCancelled
சண்டிகர்:

தலைநகர் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களை கடந்த மாதம் தாக்கிய புழுதி புயல் காரணமாக போக்குவரத்து சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. குறிப்பாக விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. புழுதிப் புயலைத் தொடர்ந்து டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளது. இதேபோல் சண்டிகரில் நேற்று புழுதிப் புயல் காரணமாக மோசமான வானிலை நிலவியது.

விமான நிலையத்தின் ஓடுபாதை தெளிவாக தெரியாத நிலை ஏற்பட்டது. பார்வை திறன் தூரம் மிகவும் குறைந்ததால் விமானங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக நேற்று அனைத்து விமானங்களும் நிறுத்தி வைக்கப்பட்டன. 

இந்நிலையில் சண்டிகரில் இன்றும் புழுதிப் புயல் காரணமாக ஓடுபாதை தெளிவாக தெரியவில்லை. எனவே, 2-வது நாளாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை நிலவரப்படி 26 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானிலையில் திடீர் மாற்றம் ஏற்படும் என்றும், புழுதிக் காற்றுடன் மழை பெய்யலாம் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #DustStorm  #ChandigarhAirport #FlightsCancelled
Tags:    

Similar News