செய்திகள்

உத்தர பிரதேசத்தில் சாலைத் தடுப்பில் மோதி கவிழ்ந்தது பேருந்து - 17 பேர் பலி

Published On 2018-06-13 08:22 IST   |   Update On 2018-06-13 09:02:00 IST
உத்தர பிரதேசத்தில் தனியார் பேருந்து சாலைத் தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். #UPBusAccident #BusOverturned
மெயின்புரி:

உத்தர பிரதேச மாநிலம் மெயின் புரி அருகே இன்று காலை தனியார் பேருந்து ஒன்று நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தது. அதிவேகமாக சென்ற அந்த பேருந்து திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதி கவிழ்ந்தது.



பேருந்திற்குள் இருந்த பயணிகள் ஒருவர் மீது ஒருவர் விழுந்ததில் பலருக்கு கை கால்களில் முறிவு ஏற்பட்டது. இதனால் ரத்த வெள்ளத்தில் துடித்த அவர்கள், தங்களை காப்பாற்றும்படி கூச்சலிட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த அக்கம் பக்கத்தில் உள்ள மக்கள் மற்றும் போலீசார் வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.

இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். 25 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். #UPBusAccident #BusOverturned

Tags:    

Similar News