செய்திகள்

மும்பை - ஹவுரா விரைவு ரெயில் தடம் புரண்டதால் அந்த வழித்தடத்தில் செல்லும் 12 ரெயில்கள் ரத்து

Published On 2018-06-10 08:58 IST   |   Update On 2018-06-10 08:58:00 IST
மும்பையில் இருந்து ஹவுரா செல்லும் ரெயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டதால் அந்த வழித்தடத்தில் 12 ரெயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. #mumbai #trainderailed
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து நாக்பூர் வழியாக ஹவுரா செல்லும் ரெயில் நேற்று இரவு வழக்கம் போல் புறப்பட்டது. இன்று அதிகாலை இகாத்பூர் ரெயில் நிலையத்தை கடந்தபோது எதிர்பாராதவிதமாக ரெயிலில் இருந்து 3 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகின.

இந்த விபத்தில் பயணிகளுக்கு பாதிப்புகள் ஏதும் இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த வழித்தடத்தில் செல்ல இருந்த 12 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், 1 ரெயில் பாதி வழியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

வழித்தடத்தை சரிசெய்யும் பணியில் துரிதமாக செயல்பட்டு வருவதாகவும், விரைவில் ரெயில்பாதை சரி செய்யப்படும் எனவும் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #mumbai #trainderailed
Tags:    

Similar News