செய்திகள்

கர்நாடக உயர்கல்வித் துறை மந்திரியின் படிப்பு என்ன தெரியுமா?

Published On 2018-06-09 13:55 GMT   |   Update On 2018-06-09 13:55 GMT
கர்நாடக அரசில் உயர்கல்வித் துறை மந்திரியின் படிப்பு தொடர்பான அதிருப்திக்கு விளக்கம் அளித்துள்ள முதல்வர் குமாரசாமி நான் மட்டும் என்ன படித்து விட்டேன்? என கேட்டுள்ளார். #Kumaraswamy #highereducationportfolio #class8passminister
பெங்களூரு:

கர்நாடக மாநில மந்திரிசபையில் கடந்த 6-ம் தேதி 25 புதிய மந்திரிகள் பதவி ஏற்றனர். இந்த மந்திரிசபையில் உயர்கல்வித்துறை மந்திரியாக ஜி.டி. தேவேகவுடா (முன்னாள் பிரதமர் எச்.டி. தேவேகவுடா அல்ல) நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் முதல் மந்திரி சித்தராமைய்யாவை சாமுண்டீஸ்வரி தொகுதியில் தோற்கடித்த மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளரான ஜி.டி. தேவேகவுடா, எட்டாம் வகுப்பு வரை படித்தவர் என்பதால் கல்வித்துறை சார்பில் மிக முக்கியமான முடிவுகளை எடுக்கக்கூடிய உயர்கல்வித்துறை மந்திரி பதவியை இவருக்கு அளித்தது தொடர்பாக முதல் மந்திரி குமாரசாமி கடுமையான கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளார்.

இந்நிலையில், இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த குமாரசாமி, ‘நான் மட்டும் என்ன படித்து விட்டேன்? நான் முதல் மந்திரியாகவில்லையா? (குமாரசாமி பி.எஸ்.சி. பட்டதாரி) அதுபோல், சிலருக்கு சில துறைகளில் பணியாற்ற விருப்பம் இருக்கலாம். ஆனால், ஒவ்வொரு துறையிலும் திறமையாக செயல்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதில் நமது திறமையை நாம் வெளிப்படுத்த வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார். #Kumaraswamy #highereducationportfolio #class8passminister 
Tags:    

Similar News