செய்திகள்

மகாராஷ்டிரா முதல் மந்திரி குடும்பத்துக்கு மாவோயிஸ்ட்கள் கொலை மிரட்டல்

Published On 2018-06-08 17:44 IST   |   Update On 2018-06-08 17:44:00 IST
மகாராஷ்டிரா மாநில முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் குடும்பத்துக்கு மாவோயிஸ்ட்கள் கொலை மிரட்டல் விடுத்து கடிதம் அனுப்பியுள்ளனர். #FadnaviMaoistthreat
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள கட்சிரோலி மாவட்டத்தில் கடந்த மாதம் போலீசாருடன் துணை ராணுவப் படையினர் நடத்திய தாக்குதலில் 16 நக்சலைட்கள் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநில முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு மாவோயிஸ்ட்டுகள் கொலை மிரட்டல் விடுத்து கடிதம் அனுப்பியுள்ளனர். முதல் மந்திரி அலுவலக முகவரிக்கு அடுத்தடுத்து அனுப்பப்பட்ட இரு மிரட்டல் கடிதங்கள் தொடர்பாக உளவுத்துறையினர் விசாரித்து வருவதாகவும், முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அவரது குடும்பத்தாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அம்மாநில உள்துறை அமைச்சகம் இன்று குறிப்பிட்டுள்ளது. #FadnaviMaoistthreat 
Tags:    

Similar News