செய்திகள்

ஜனாதிபதி மாளிகையில் இந்த ஆண்டு இப்தார் விருந்து கிடையாது

Published On 2018-06-06 20:56 IST   |   Update On 2018-06-06 20:56:00 IST
ரம்ஜான் நோன்பை ஒட்டி டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் அளிக்கப்படும் இப்தார் விருந்து இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்தாக இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. #Iftarparty
புது டெல்லி :

டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஆண்டு தோறும் இப்தார் விருந்து அளிக்கப்படுவது வழக்கம். இடையில் அப்துல்கலாம் ஜனாதிபதியாக பதவி வகித்த 2002- 2007 காலகட்டத்தில் இப்தார் நோன்பு கொடுக்கும் நிகழ்ச்சியை அவர் கைவிடார். இப்தார் நோன்பு நிகழ்சிக்கு ஆகும் செலவை ஆதரவற்றோர் நலனுக்காக அவர் அளித்து வந்தார்.

இந்நிலையில், இந்த ஆண்டு ஜனாதிபதி மாளிகையில் இப்தார் விருந்து அளிக்கப்படாது என இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து ஜனாதிபதி அலுவலகத்தின் செய்தி தொடர்பாளர் அசோக் மாலிக் கூறியதாவது :-

ஜனாதிபதியாக ராம் நாத் கோவிந்த் பதவியேற்ற பின்னர் மத ரீதியான எந்த நிகழ்சிகளும் பொதுமக்களின் வரி பணத்தில் ஜனாதிபதி மாளிகையில் நடத்துவது இல்லை என அவர் முடிவு செய்துள்ளார். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு எனும் கொள்கையின் அடிப்படையில் மதம் தவிர அனைத்து சமய நிகழ்ச்சிகளுக்கும் இது பொருந்தும்.

நிச்சயம் அனைத்து மத விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளின் போது ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி வாழ்த்து தெரிவிப்பார் என அசோக் மாலிக் குறிப்பிட்டுள்ளார்.  #Iftarparty
Tags:    

Similar News