செய்திகள்

நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்த பிரதீபாவின் குடும்பத்திற்கு ராகுல் காந்தி இரங்கல்

Published On 2018-06-06 19:10 IST   |   Update On 2018-06-06 19:10:00 IST
நீட் தேர்வில் தேர்ச்சியடைய முடியாத விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட பிரதீபாவின் குடும்பத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். #NEET2018 #PratheebaSuicide #RahulGandhi

புதுடெல்லி:

மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பிரதீபா என்ற மாணவி கடந்த 3-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். கூலித்தொழிலாளியின் மகளான பிரதீபா பிளஸ் டூ தேர்வில் 1125 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வில் வெற்றி அடைய முடியாத விரக்தியில் அவர் தற்கொலை செய்துகொண்டார். 

இந்நிலையில், தற்கொலை செய்துகொண்ட பிரதீபாவின் குடும்பத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.  #NEET2018 #PratheebaSuicide #RahulGandhi
Tags:    

Similar News