செய்திகள்
ஹவுராவில் திரிணாமுல் காங். பிரமுகர் சுட்டுக்கொலை - ஆத்திரமடைந்த பொதுமக்கள் மறியல்
மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரமுகர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் காரணமாக அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. #TMCleaderkilled
ஹவுரா:
மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் பாக்னன் பகுதியைச் சேர்ந்தவர் முகமது மோஷின் கான். ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் பூத் அளவிலான செயலாளர் பொறுப்பு வகித்து வந்தார்.
இவர் நேற்று இரவு வீட்டிற்கு திரும்பியபோது, ஹதூரியா கிராமத்தில் மர்மநபர்கள் வழிமறித்து துப்பாக்கியால் சுட்டனர். இதில் பலத்த காயமடைந்த முகமது மோஷின் கான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுபற்றி தகவல் பரவியதும் அப்பகுதியில் ஏராளமான மக்கள் கூடினர். மோஷின் கானை சுட்டுக்கொன்ற நபர்களை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளைத் தேடி வருகின்றனர். 3 பேரை பிடித்து விசாரித்து வருவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுட்டுக் கொல்லப்பட்ட மோஷின் கானின் மனைவி, கிராம பஞ்சாயத்து உறுப்பினராக பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. #TMCleaderkilled