செய்திகள்

விளம்பரத்திற்காகவே விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர் - மத்திய மந்திரி பேச்சால் சர்ச்சை

Published On 2018-06-03 23:19 GMT   |   Update On 2018-06-03 23:19 GMT
ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கவும், விளம்பரம் தேடவுமே விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதாக மத்திய விவசாயத்துறை மந்திரி ராதா மோகன்சிங் கூறியுள்ளார். #AgricultureMinister #RadhaMohanSingh #Farmersprotest #mediaattention

புதுடெல்லி:

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் 11-ம் தேதி பல கோரிக்கைகளை வலியுறுத்தி எட்டு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது ஏற்பட்ட கலவரத்தின்போது போராட்டத்தில் ஈடுபட்ட 6 விவசாயிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

இந்த சம்பவத்தை நினைவுகூரும் வகையில் விவசாயிகள் 10 நாட்கள் போராட்டத்தை கடந்த 1-ம் தேதி தொடங்கினர். இதனால் வடமாநிலங்களில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. 

இதுகுறித்து பேசிய மத்திய விவசாயத்துறை மந்திரி ராதா மோகன்சிங், ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கவும், விளம்பரம் தேடவுமே விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதாக கூறியுள்ளார்.



அவர் கூறுகையில், மத்திய அரசு விவசாயிகளின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இதனை விவசாயிகள் உணராமல் ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கவும், விளம்பரம் தேடவும் போராட்டம் நடத்துகின்றனர், என கூறினார். மத்திய விவசாயத்துறை மந்திரி இவ்வாறு பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். #AgricultureMinister #RadhaMohanSingh #Farmersprotest #mediaattention
Tags:    

Similar News