செய்திகள்

சல்மான்கானை தாக்கினால் ரூ.2 லட்சம் - பிரவின் தொஹாடியாவின் புதிய அமைப்பு அறிவிப்பு

Published On 2018-06-01 05:31 GMT   |   Update On 2018-06-01 05:41 GMT
நடிகர் சல்மான்கானை தாக்குபவர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என விஎச்பி முன்னாள் தலைவர் பிரவின் தொஹாடியா தொடங்கியுள்ள புதிய அமைப்பு அறிவித்துள்ளது.
லக்னோ:

விஷ்ய இந்து பரிஷத் அமைப்பின் தலைவராக இருந்த பிரவீன் தொஹாடியா சமீபத்தில் அந்த அமைப்பில் இருந்து விலகியதோடு, குஜராத் அரசு தன்னை கொலை செய்ய பார்க்கிறது என பரபரப்பு குற்றச்சாட்டை கூறியிருந்தார். இதனை அடுத்து, ஹிந்து ஹி ஆகே என்ற புதிய அமைப்பை தொஹாடியா தொடங்கினார்.

இந்நிலையில், இந்த அமைப்பின் ஆக்ரா பிரிவு தலைவர் கோவிந்த் பராஷர் நடிகர் சல்மான்கானை தாக்குபவர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார். சல்மான்கான் தயாரிப்பில் லவ்ராத்திரி என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. நவராத்திரி பண்டிகைக்கு இந்த படம் திரைக்கு வர உள்ளது.

இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக இந்த செயல் இருப்பதாக கூறி சல்மான்கானை தாக்குபவர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்படுள்ளது. மேலும், மாநில அரசுகள் இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் இல்லாவிட்டால் போராட்டம் நடத்துவோம் எனவும் அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News