செய்திகள்

மகாபாரத காலத்தில் துவங்கியது ஊடகத்துறை - உ.பி. துணை முதல்வர் பேச்சு

Published On 2018-05-31 09:14 GMT   |   Update On 2018-05-31 09:14 GMT
உத்தரப்பிரதேசத்தில் இந்தி பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய துணை முதல்வர் தினேஷ் சர்மா, மகாபாரதம் காலத்திலேயே ஊடகத்துறை இருந்தது என கூறியுள்ளார். #DineshSharma #Journalism #Mahabharata
லக்னோ:

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இந்தி பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் துணை முதல்வர் தினேஷ் சர்மா கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், அஸ்தினாபுரத்தில் அமர்ந்தபடி, போரின்போது பறவையின் பார்வையின் வழியே போர் நடப்பதை சஞ்சயா விவரித்த நிகழ்வை எடுத்துரைத்து, அப்போது இருந்தே ஊடகத்துறை துவங்கிவிட்டதாகவும் தெரிவித்தார். மேலும், நேரலை இல்லாமல் எவ்வாறு விளக்க முடியும்? எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், கூகுள் இப்போது வந்தது. ஆனால் நாரதர் அந்த காலத்திலேயே கூகுளாக செயல்பட்டவர். ‘நாராயணா’ மந்திரம் ஓதியபடி ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செய்திகளை சேர்க்கக்கூடியவர் நாரதர் என கூறினார்.

சமீபத்தில், இண்டர்நெட், நவீன அறுவை சிகிச்சை, புவி ஈர்ப்பு தத்துவம் போன்ற அனைத்தும் பண்டைய காலங்களில் இந்தியாவில் தோன்றியது என பா.ஜ.க. தலைவர்கள் கூறி சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது. #DineshSharma #Journalism #Mahabharata
Tags:    

Similar News