செய்திகள்
சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு
சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. சி.பி.எஸ்.இ. இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். #cbseresults #cbse10thresult2018
புதுடெல்லி:
மத்திய அரசின் பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இந்தியா முழுவதும் மார்ச் 5–ம் தேதி தொடங்கி ஏப்ரல் 4–ம் தேதி வரை நடைபெற்றது. தேர்வை 16 லட்சத்து 38 ஆயிரத்து 428 மாணவ, மாணவிகள் எழுதினார்கள்.
மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட ஹால் டிக்கெட்டில் உள்ள ரோல் நம்பர், பிறந்த தேதி, பள்ளியின் எண் மற்றும் தேர்வு மைய எண்ணை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் அறிந்துகொள்ளலாம். #cbseresults #cbse10thresult2018

விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவை மாணவ–மாணவிகள் www.results.nic.in, www.cbseresults.nic.in, www.cbse.nic.in ஆகிய இணைய தளங்களில் பார்க்கலாம். கூகுள் தளத்திலும் மதிப்பெண்களுடன் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.