செய்திகள்

காஷ்மீரில் அரசியல் கட்சி தலைவரின் பாதுகாவலர்களிடம் இருந்து 2 துப்பாக்கிகள் பறிப்பு

Published On 2018-05-27 22:39 GMT   |   Update On 2018-05-27 22:39 GMT
காஷ்மீரில் பயங்கரவாதிகள் சிலர் பாதுகாவலர்கள் இருவரையும் தாக்கி அவர்களிடம் இருந்து 2 துப்பாக்கிகளை பறித்து சென்றனர்.
ஜம்மு:

காஷ்மீரில் ரோந்து பணிகளில் ஈடுபடும் ராணுவவீரர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பிரமுகர்களின் பாதுகாவலர்களிடம் இருந்து, பயங்கரவாதிகள் துப்பாக்கிகளை பறித்து செல்லும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது.

இந்நிலையில், குல்காம் மாவட்டத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவரும், வக்கீலுமான கவ்ஹார் என்பவர் அங்கு உள்ள கிராமத்தில் தன்னுடைய உறவினர் வீட்டுக்கு சென்றார். அவருடைய பாதுகாப்புக்காக 2 பாதுகாவலர்கள் சென்றிருந்தனர்.

அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் சிலர் பாதுகாவலர்கள் இருவரையும் தாக்கி அவர்களிடம் இருந்து 2 துப்பாக்கிகளை பறித்து சென்றனர். இதுதொடர்பாக போலீசில் கவ்ஹார் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய பயங்கரவாதிகளை போலீசார் தேடி வருகின்றனர். 
Tags:    

Similar News