செய்திகள்

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்தவர் குஜராத் எல்லையில் பிடிபட்டார்

Published On 2018-05-27 14:40 IST   |   Update On 2018-05-27 14:40:00 IST
குஜராத் மாநிலத்தில் உள்ள எல்லைக்கோட்டுப் பகுதி வழியாக இன்று இந்தியாவுக்குள் நுழைந்தவரை எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். #Pakistanimannabs #BSF
அகமதாபாத்:

குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டம், கவாடா பகுதியில் உள்ள 
இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கோட்டுப் பகுதியில் பாதுகாப்பு படையினர் இன்று அதிகாலை வழக்கம்போல் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, ரான் என்ற இடத்தில் உள்ள எல்லை கம்பம் 1085 மற்றும் 1090-க்கு இடைப்பட்ட பகுதி வழியாக இந்தியாவுக்குள் ஒருவர் நுழைய முயன்றதை கண்டு அவரை மடக்கிப் பிடித்தனர்.

பிடிபட்ட சுமார் 30 வயது மதிக்கத்தக்க அந்த நபர் தனது பெயர் ராஜு என்றும் பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தை சேர்ந்தவர் என்றும் தெரிவித்ததாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். அவரிடம் இருந்த கைபேசியும் மூன்று சிம் கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. #Pakistanimannabs #BSF
Tags:    

Similar News