செய்திகள்

சுனந்தா புஷ்கர் மரண வழக்கு: எம்.பி.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் கோர்ட்டுக்கு மாற்றம்

Published On 2018-05-24 18:55 GMT   |   Update On 2018-05-24 18:55 GMT
சுனந்தா புஷ்கர் மரண வழக்கு மீதான விசாரணையை எம்.பி.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு வழக்கு மாற்றப்படுவதாக நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளார். #SunandaPushkar #DeathCase
புதுடெல்லி:

காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.யுமான சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் டெல்லி ஓட்டல் அறையில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். இதுதொடர்பாக டெல்லி போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சுனந்தா புஷ்கர் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.



இந்த வழக்கில் சசிதரூர் மீது தற்கொலைக்கு தூண்டியதாகவும், இதற்கு போதிய ஆதாரம் இருப்பதாகவும் போலீசார் டெல்லி மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கை நேற்று விசாரித்த மாஜிஸ்திரேட்டு தர்மேந்திர சிங், ‘குற்றம்சாட்டப்பட்டுள்ள சசிதரூர் தற்போதும் எம்.பி.யாக உள்ளார்.

எனவே சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு வழக்கு மாற்றப்படுகிறது. வருகிற 28-ந் தேதி அந்த மாஜிஸ்திரேட்டு சமர் விஷால் இந்த வழக்கை விசாரிப்பார்’ என உத்தரவிட்டார்.  #SunandaPushkar #DeathCase
Tags:    

Similar News