செய்திகள்

நாகலாந்து பாராளுமன்ற இடைத்தேர்தலில் நாகா மக்கள் முன்னணிக்கு காங்கிரஸ் ஆதரவு

Published On 2018-05-22 13:41 GMT   |   Update On 2018-05-22 13:41 GMT
நாகலாந்து மாநில பாராளுமன்ற இடைத்தேர்தலில் நாகா மக்கள் முன்னணி வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க காங்கிரஸ் கட்சி முன்வந்துள்ளது. #NagalandLSbypoll
கோஹிமா:

நாகலாந்து மாநிலத்தின் முதல் மந்திரியாக தேசியவாத குடியரசு முன்னேற்ற கட்சி தலைவர் நெய்பியூ ரியூ சமீபத்தில் பொறுப்பேற்றதை தொடர்ந்து அவர் முன்னர் எம்.பி.யாக பதவிவகித்த லோனே பாராளுமன்ற தொகுதிக்கு வரும் 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் ஆளும் தேசியவாத குடியரசு முன்னேற்ற கட்சி, பா.ஜ.க. கூட்டணி சார்பில் மாநில முன்னாள் மந்திரி டோக்கேஹோ எப்தோமி போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக எதிர்க்கட்சியான நாகா மக்கள் முன்னணி சார்பில் அபோக் ஜமிர் என்பவர் நிறுத்தப்பட்டுள்ளார்.


இந்நிலையில், இந்த இடைத்தேர்தலில் போட்டியில் இருந்து விலகி கொண்ட காங்கிரஸ் கட்சி நாகா மக்கள் முன்னணி வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளது. இதற்கான அறிவிப்பை நாகலாந்து மாநில காங்கிரஸ் தலைவர் தேரி வெளியிட்டுள்ளார்.

மதவாத சக்திகளிடம் நாகலாந்தை மீட்பதற்காக கட்சி மேலிடம் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். #NagalandLSbypoll #CongressbackNPFcandidate
Tags:    

Similar News