செய்திகள்

விளையாடும்போது தானிய குதிருக்குள் சிக்கிய 3 குழந்தைகள் மூச்சு திணறி பலி

Published On 2018-05-20 12:58 GMT   |   Update On 2018-05-20 12:58 GMT
உத்தரகாண்ட் மாநிலத்தில் விளையாடும்போது தானிய குதிருக்குள் சிக்கிய 3 குழந்தைகள் மூச்சு திணறி பரிதாபமாக பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டேராடூன்:

உத்தரகாண்ட் மாநிலம் பிதோரகர் மாவட்டத்தின் தார்குலா பகுதியில் அமைந்துள்ள கும்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் நிஷா(10), சப்னா (7), கார்த்திக் (5).

இவர்கள் நேற்று மாலை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தனர். பெற்றோர் வேலை விஷயமாக வெளியே சென்றனர். வீட்டில் தாத்தா மட்டும் இருந்தார். சிறிது நேரம் கழித்து தாத்தா மாலை உணவுக்காக குழந்தைகளை தேடியுள்ளார். அவர்கள் அங்கு இல்லாததை கண்டு பதறிய அவர், அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளார்.

அவர்கள் வீட்டில் தேடும்போது, அங்கிருந்த பெரிய தானிய குதிர் ஒன்றில் மூன்று குழந்தைகளும் இருந்ததை கண்டனர். அதிலிருந்து வெளியே எடுக்கும்போது அவர்கள் இறந்துபோனது தெரிந்தது.

தகவலறிந்து அங்கு வந்த போலீசார் குழந்தைகள் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், குழந்தைகள் மூவரும் தானிய குதிரில் ஒளிந்து கொண்டு விளையாடியதும், அங்கு சிக்கி மூச்சு திணறி இறந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
Tags:    

Similar News