செய்திகள்

உச்சகட்ட பரபரப்பில் கர்நாடக அரசியல் களம் - சொகுசு விடுதியில் காங். எம்.எல்.ஏ.க்கள்

Published On 2018-05-16 15:32 GMT   |   Update On 2018-05-16 15:32 GMT
கர்நாடக அரசியல் களத்தில் அனல் பறந்து வரும் நிலையில், 2 சுயேட்சை எம்.எல்.ஏ.க்களுடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 2 பேருந்துகளில் மைசூரு சாலையில் உள்ள சொகுசு விடுதிக்கு சென்றனர். #KarnatakaElection #KarnatakaCMRace
பெங்களூர்:

கர்நாடகாவில் நேற்று வெளியான சட்டசபை தேர்தல் முடிவுகளில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. இதனால், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்தது. இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தது.

104 இடங்களில் வென்ற பாஜக ஆட்சியமைக்க ஆளுநரை சந்தித்து உரிமை கோரியது. காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயற்சி எடுத்து வருகிறது. இதனை அடுத்து, 100 கோடி ரூபாய் எம்.எல்.ஏ.க்களிடம் பாஜக பேரம் பேசுவதாக மஜத தலைவர் குமாரசாமி பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

மாலை 5 மணியளவில் குமாரசாமி, காங்கிரஸ் மாநில தலைவர் பரமேஸ்வரா ஆகியோர் கவர்னர் பாஜுபாய் வாலாவை சந்தித்து ஆட்சியமைக்க அழைக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து, பாஜகவை ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு விடுத்துள்ளதாகவும், எடியூரப்பா நாளை முதல்வராக பதவியேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

எம்.எல்.ஏ.க்களை பாஜக வளைத்துவிடக்கூடாது என்பதற்கான மைசூரு சாலையில் உள்ள சொகுசு விடுதி அவர்களுக்காக புக் செய்யப்பட்டது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் 2 சுயேட்சை எம்.எல்.ஏ.க்களும் 2 பேருந்துகளில் விடுதிக்கு புறப்பட்டுச் சென்றனர்.
Tags:    

Similar News