செய்திகள்

சமூக வலைத்தள கருத்துப்படி மத்திய அரசு அனைத்து துறையிலும் தோல்வி அடைந்துவிட்டது- ப.சிதம்பரம்

Published On 2018-05-15 12:51 IST   |   Update On 2018-05-15 12:51:00 IST
சமூக வலைத்தளத்தின் கருத்து கணிப்புப்படி சராசரி மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தக் கூடிய மத்திய அரசின் அனைத்து துறைகளும் தோல்வி அடைந்து விட்டதாக ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.#PChidambaram #Congress
புதுடெல்லி:

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் டுவிட்டர் மூலம் தனது கருத்துக்களை அவ்வபோது பதிவு செய்து வருகிறார்.

அவர் இன்று தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

சமூக வலைத்தளத்தின் கருத்து கணிப்புப்படி சராசரி மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தக் கூடிய மத்திய அரசின் அனைத்து துறைகளும் தோல்வி அடைந்து விட்டன.



அந்த பட்டியலில் தொழிலாளர் நலத்துறை, விவசாயம், மனிதவளம் மேம்பாடு (கல்வி) வீட்டு வசதி, சுகாதாரம், இன்னும் பல அடங்கும்.

இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார்.#PChidambaram #Congress
Tags:    

Similar News