செய்திகள்

உ.பி., டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் புழுதி புயல் தாக்கி 41 பேர் பலி - பிரதமர் மோடி இரங்கல்

Published On 2018-05-13 19:38 GMT   |   Update On 2018-05-13 19:38 GMT
உ.பி., மேற்குவங்கம், ஆந்திரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் புழுதி புயல் மற்றும் மின்னல் தாக்கியதில் பலியானவர்கள் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். #Duststorm #PMModi
புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் நேற்று மாலை மழை மற்றும் பலத்த சூறைக்காற்றுடன் பல பகுதிகளில் புழுதிப்புயல் தாக்கியது. இதனால் இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களின் வருகை, புறப்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. பல் விமானங்கள் மாற்று பாதைகளில் திருப்பி விடப்பட்டன. பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்தன.

உபியில் ஏற்பட்ட புழுதி புயலுக்கு 18 பேரும், மேற்கு வங்கத்தில் 4 குழந்தைகள் உள்பட 12 பேரும், ஆந்திராவில் மின்னல் தாக்கி 9 பேரும், டெல்லியில் 2 பேரும் என மொத்தம் 41 பேர் பலியாகினர்.



இந்நிலையில், உ.பி., மேற்குவங்கம், ஆந்திரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் தாக்கிய புழுதி புயல் மற்றும் மின்னல் தாக்கியதில் பலியானவர்கள் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மோடி டுவிட்டரில் கூறுகையில், நாட்டின் சில மாநிலங்களில் புழுதி புயல் தாக்கி பலியானவர்கள் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், இதில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என இறைவனிடம் வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார். #Duststorm #PMModi
Tags:    

Similar News