செய்திகள்
நேபாளம் சுற்றுப்பயணம் முடித்து டெல்லி திரும்பினார் மோடி
நேபாளம் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பிய பிரதமர் மோடியை, வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் வரவேற்றார். #pmmodi #sushmaswaraj
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக நேபாளம் சென்றார். அங்கு சீதை பிறந்த இடமான ஜனக்புரியில் இருந்து உ.பி.யின் அயோத்தி நகருக்கு புதிய பஸ் சேவையை தொடங்கி வைத்தார்.
மேலும் புதிய மின்சார உற்பத்தி நிலையத்துக்கான கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இதையடுத்து, இன்று முக்திநாத் ஆலயத்துக்குச் சென்ற அவர் முக்திநாதரை வணங்கினார். பிற்பகலில் பசுபதிநாதர் ஆலயத்தில் வழிபாடு செய்த மோடி காத்மாண்டு நகரில் உள்ள பிரபல ஓட்டலில் இந்திய தூதர் மஞ்சீவி சிங் பூரி அளித்த விருந்தில் பங்கேற்றார்.
அதன்பின்னர், நேபாளத்தில் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பினார். இன்று மாலை தனி விமானம் மூலம் டெல்லி திரும்பிய மோடியை மத்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். #pmmodi #sushmaswaraj