செய்திகள்

சிசிடிவி கொள்முதலில் ஊழல் - டெல்லி முதல் மந்திரி வீட்டை முற்றுகையிட்டு நாளை காங்கிரஸ் போராட்டம்

Published On 2018-05-12 14:58 GMT   |   Update On 2018-05-12 14:58 GMT
டெல்லியின் முக்கிய பகுதிகளை கண்காணிக்க சி.சி.டி.வி. கொள்முதலில் ஊழல் நடந்ததாக குற்றம்சாட்டும் காங்கிரஸ் சார்பில் நாளை அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறுகிறது. #CCTVscam #congress #Kejriwal
புதுடெல்லி:

பெண்களின் பாதுகாப்பு கருதி டெல்லி முழுவதும் சுமார் ஒன்றரை லட்சம் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த ஆளும் ஆம் ஆத்மி அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், இதற்கான டெண்டர் விடப்பட்டதில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இந்த திட்டத்துக்கு கவர்னர் அனில் பைஜால் ஒத்துழைப்பு வழங்காமல் காலம்தாழ்த்தி வருகிறார். 

இந்நிலையில், சி.சி.டி.வி. கொள்முதலில் ஊழல் நடந்ததாக குற்றம்சாட்டும் காங்கிரஸ் சார்பில்  மெழுகு வர்த்திகளை ஏந்தி ஊர்வலமாக சென்று அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நாளை நடைபெறுகிறது. 

அரவிந்த் கெஜ்ரிவால் முதல் மந்திரி பதவியில் இருந்து விலக வேண்டும் என்று நடைபெறும் இந்த போராட்டத்துக்கான அறிவிப்பை டெல்லி காங்கிரஸ் பிரமுகர்கள் அரவிந்தர் சிங் லவ்லி மற்றும் ஹாரூன் யூசுப் இன்று மாலை வெளியிட்டனர்.

டெல்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான் தலமையில் நடைபெறும் இந்த போராட்டத்தில் காங்கிரசார் பெரும் திரளாக கலந்துகொள்ள வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். எங்களது குற்றச்சாட்டு பொய் என்றால் அரவிந்த் கெஜ்ரிவால் எங்கள்மீது மான நஷ்ட வழக்கு தொடரட்டும் எனவும் அவர்கள் சவால் விட்டுள்ளனர். #CCTVscam #congress #Kejriwal
Tags:    

Similar News