செய்திகள்

இஸ்ரேல் மீதான ஏவுகணை தாக்குதல் - ஈரானுக்கு டிரம்ப், தெரசா மே கண்டனம்

Published On 2018-05-12 08:49 GMT   |   Update On 2018-05-12 08:49 GMT
இஸ்ரேல் மீது ஈரான் ராணுவம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதற்கு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் பிரிட்டன் பிரதமர் தெரசா மே ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். #Trump #theresamay
வாஷிங்டன்:

ஈரான் அரசு சிரியாவில் இருந்து தனது எதிரி நாடான இஸ்ரேல் மீது ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. ஏறக்குறைய 20 ஏவுகணைகளை கொண்டு கோலன் பகுதியிலுள்ள இஸ்ரேலிய நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவற்றில் சில ஏவுகணைகளை இஸ்ரேல் வழிமறித்து அழித்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்து உள்ளன. இதுபற்றி தொலைபேசி மூலம் பிரிட்டன் பிரதமர் தெரசா மே உடன் தொடர்பு கொண்டு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேசினார்.  

அதன்பின்னர் வெள்ளை மாளிகை வெளிட்டுள்ள செய்தியில், ‘சிரியாவில் இருந்து இஸ்ரேல் மீது ஈரான் அரசு நடத்திய முன்னறிவிக்கப்படாத ஏவுகணை தாக்குதல்களுக்கு இரு தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஈரானின் தாக்குதல் போக்கை சரியான முறையில் எப்படி எதிர்கொள்வது என அவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்’ என தெரிவிக்கப்பட்டு உள்ளது. #Trump #theresamay
Tags:    

Similar News