செய்திகள்

ஜனாதிபதி, பிரதமரிடம் ஒருமாத சம்பளத்தை கேட்கும் மத்திய மந்திரி நிதின் கட்கரி

Published On 2018-05-10 14:19 GMT   |   Update On 2018-05-10 14:19 GMT
மத்திய சாலை, நீர்வழி போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்னரி, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கங்கை நதி தூய்மை பணிக்காக ஒருமாத சம்பளத்தை அளிக்க வேண்டும் என கேட்டுள்ளார். #NitinGadkari #CleanGangaFund
புதுடெல்லி:

கங்கை நதியை தூய்மை செய்ய தனி அமைச்சகம் அமைத்து அதற்கான பணியில் ஈடுபட்டு வரும் மத்திய அரசு தற்போது தூய்மை செய்யும் திட்டத்திற்கு நிதியை நன்கொடை மூலமாக பெற்று வருகிறது. இது தொடர்பாக மத்திய சாலை, நீர்வழி போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்கரி கூறுகையில்:-

கங்கை நதியை தூய்மை செய்வதற்காக நாடு முழுவதிலும் இருந்து நிதி பெறப்படுகிறது. கடந்த 2014-ம் ஆண்டு முதல் தற்போது வரை சுமார் 250 கோடி ரூபாய் வரை நிதி வசூல் செய்யப்பட்டுள்ளது.



கங்கை நதியை தூய்மை செய்வதற்காக, ஒருமாத சம்பளத்தை நன்கொடையாக அளிக்குமாறு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் என அனைவருக்கும் கடிதம் எழுதியுள்ளேன்.

கங்கை நதி தூய்மை திட்டத்துக்கு பொதுமக்களும் அவர்களால் இயன்ற பண உதவியை டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம்   அளிக்கலாம். கங்கை நதி தூய்மை திட்டத்துக்கு அளிக்கப்படும் நிதிக்கு 100% வரிவிலக்கு அளிக்கப்படும்

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News