செய்திகள்

காவிரி வரைவு செயல் திட்டத்தை 14-ம் தேதி தாக்கல் செய்துவிடுவோம் - நீர்வளத்துறை செயலர் தகவல்

Published On 2018-05-10 08:51 GMT   |   Update On 2018-05-10 08:51 GMT
உச்ச நீதிமன்றத்தில் 14-ம் தேதி காவிரி வரைவு செயல் திட்ட அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்யும் என நீர்வளத்துறை செயலாளர் கூறியுள்ளார். #CauveryIssue #SupremeCourt #DraftScheme
புதுடெல்லி:

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக மத்திய அரசு வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. ஆனால், கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் இருப்பதால் கூடுதல் அவகாசம் வேண்டும் என மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது வரும் 14-ம் தேதி வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.



வரும் 12-ம் தேதி கர்நாடக தேர்தல் நடக்க உள்ளதால் மே14-ம் தேதி மத்திய அரசு வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய வாய்ப்பு இல்லை என்றும், கூடுதல் அவகாசம் கேட்கலாம் என்றும் பேசப்பட்டது.

ஆனால், 14ம் தேதி வழக்கு விசாரணைக்கு வரும்போது மேற்கொண்டு அவகாசம் கேட்க மாட்டோம் என மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் தெரிவித்துள்ளார். 14-ம் தேதி வரைவு செயல் திட்டத்தை சமர்ப்பித்து விடுவோம் என்றும் அவர் கூறியுள்ளார். #CauveryIssue #SupremeCourt #DraftScheme

Tags:    

Similar News