செய்திகள்

ஜூன் 22-ந் தேதி ஓய்வு பெறும் நீதிபதி செல்லமேஸ்வர் பிரிவு உபசார விழா அழைப்பை நிராகரித்தார்

Published On 2018-05-09 20:56 GMT   |   Update On 2018-05-09 20:56 GMT
ஜூன் 22-ந் தேதி பிரிவு உபசார விழாவில் கலந்து கொள்ள ஓய்வு பெறும் நீதிபதி செல்லமேஸ்வரரை பார் அசோசியேஷன் நிர்வாகிகள் சந்தித்து அழைப்பு விடுத்தபோது அவர் அதை ஏற்க மறுத்து விட்டார். #Justice #Chelameswar
புதுடெல்லி:

சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதி ஜே.செல்லமேஸ்வர், ஜூன் 22-ந் தேதி ஓய்வு பெறுகிறார். அதனால், கோடை விடுமுறைக்கு முந்தைய கடைசி வேலைநாளான மே 18-ந் தேதி, அவருக்கு பிரிவு உபசார விழா நடத்த சுப்ரீம் கோர்ட்டு பார் அசோசியேஷன் முன்வந்துள்ளது.

இதுதொடர்பாக, கடந்த வாரம், நீதிபதி செல்லமேஸ்வரை பார் அசோசியேஷன் நிர்வாகிகள் சந்தித்து அழைப்பு விடுத்தபோது, அவர் அதை ஏற்க மறுத்து விட்டார். பார் அசோசியேஷன் செயற்குழு உறுப்பினர்கள், நேற்று நீதிபதியை அவரது இல்லத்தில் சந்தித்து அவரது மனதை மாற்ற முயன்றனர். ஆயினும், அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக வர இயலாது என்று கூறி விட்டார்.

இத்தகவல்களை சுப்ரீம் கோர்ட்டு பார் அசோசியேஷன் தலைவர் விகாஸ் சிங் கூறினார். நீதிபதி செல்லமேஸ்வர், தொடர்ந்து 3-வது புதன்கிழமையாக நேற்று சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்லவில்லை. வழக்குகள் ஒதுக்கீடு தொடர்பாக, தலைமை நீதிபதிக்கு எதிராக பேட்டி அளித்தவர் நீதிபதி செல்லமேஸ்வர் என்பது குறிப்பிடத்தக்கது.  #Justice #Chelameswar 
Tags:    

Similar News