செய்திகள்

பதவி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி.க்கு இட ஒதுக்கீடு - சுப்ரீம் கோர்ட்டை அணுக மத்திய அரசு முடிவு

Published On 2018-04-30 22:40 GMT   |   Update On 2018-04-30 22:40 GMT
பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டை உறுதி செய்யவும், பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீட்டை பாதுகாக்கவும் சுப்ரீம் கோர்ட்டை அணுகபோவதாக மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
புதுடெல்லி:

மத்திய மந்திரியும், லோக் ஜனசக்தி கட்சி தலைவருமான ராம்விலாஸ் பஸ்வான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வன்கொடுமை தடுப்பு சட்டம், அரசுப்பணியில் பதவி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இட ஒதுக்கீடு, பல்கலைக் கழகங்களில் இட ஒதுக்கீடு ஆகிய 3 விஷயங்களில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு பாதகமாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. இதுபற்றி ஆராய ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மந்திரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

வன்கொடுமை சட்ட திருத்தத்துக்கு எதிராக மத்திய அரசு ஏற்கனவே மறு ஆய்வு மனு தாக்கல் செய்து விட்டது. அதுபோல், பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டை உறுதி செய்யவும், பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீட்டை பாதுகாக்கவும் சுப்ரீம் கோர்ட்டை அணுகுவோம். தேவைப்பட்டால், அவசர சட்டமும் கொண்டு வரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News