செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் போந்திப்போராவின் ஹசாங்கம் பகுதியில் பனிச்சரிவில் சிக்கி ஒருவர் பலி

Published On 2018-03-01 10:47 IST   |   Update On 2018-03-01 10:47:00 IST
ஜம்மு காஷ்மீர் போந்திபோரா மாவட்டத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ஒருவர் பலியானார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார் என போலீசார் தெரிவித்தனர். #kashmir #avalanche
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் போந்திபோரா மாவட்டத்தில் உள்ள ஹசாங்கம் - மலாங்கம் பகுதியில் நேற்று இரவு பனிச்சரிவு ஏற்பட்டது.

மலாங்கம் பகுதியை சேர்ந்த அப்துல் அஜிஸ் பெய்க் (25), ஹலீம் பெய்க் (23) ஆகியோர் இந்த பனிச்சரிவில் சிக்கினர். தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் இருவரையும் மீட்டனர். அவர்களை அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி அஜிஸ் பெய்க் பரிதாபமாக இறந்தார். மேலும் ஹலீம் பெய்க் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார் என போலீசார் தெரிவித்தனர்.

கடந்த ஜனவரி மாதம் குப்வாரா மாவட்டத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 11 பேர் இறந்ததும், கடந்த மாதம் குல்மார்கில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி வெளிநாட்டு வான் சாகச வீரர்கள் இருவர் பலியானதும் குறிப்பிடத்தக்கது. #kashmir #avalanche #tamilnews

Similar News